ஒருவழி மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்த கிராம நிருவாக அலுவலர்கள், விருப்பத்தேர்வுக்காக அதிகபட்சமாக மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஒருவழி மாவட்ட மாறுதல் கோரும் கிராம நிருவாக அலுவலர்கள் மூன்று மாவட்டங்களை தேர்வு செய்து சமர்ப்பித்த விண்ணப்பங்கள் பரிசீலக்கப்பட்டன.
இறுதி உத்தரவு வழங்குவதற்கு முன், மீண்டும் ஒரு வாய்ப்பாக, மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்த கிராம நிருவாக அலுவலர்கள், சமர்ப்பித்த மூன்று மாவட்டங்களை, மீண்டும் உறுதிப்படுத்த இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சமர்ப்பித்த மாவட்டங்களை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் அல்லது ஒரே மாவட்டத்திற்கு மட்டும் மாறுதல் விரும்புவார்கள், இரண்டாவது மற்றும் மூன்றாவது தேர்வாக அதே மாவட்டத்தையே, குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக 25.07.2022 அன்று காலை 10.30 மணி முதல் 27.07.2022 மாலை 05.30 வரை, சம்பந்தப்பட்ட கிராம நிருவாக அலுவலர்கள் இணையதளத்தில் தங்களது login-ல் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளவோ அல்லது மாற்றம் செய்யவோ இறுதி வாய்ப்பளிக்கப்படுகிறது.
Notification
ஒரு வழி மாவட்ட மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 20.06.2022 அன்று மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. (Applying online application for One Way District transfer is extended up to 20.06.2022 up to 5.30 pm) Click here View
தமிழ் வடிவம்