தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

திட்டங்கள்


  • சமூகப் பாதுகாப்புத் திட்டம்
    சமூகத்தின் ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களை பாதுகாக்க, சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு முன்னோடியாக விளங்குகிறது. இத்திட்டங்களின் கீழ், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருமணமாகாத ஏழைப் பெண்கள் ஆகியோருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000/- ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், 01.01.2023 முதல் ரூ.1,500/- ஆகவும், இதர ஓய்வூதியத் திட்டங்களின் (மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் தவிர்த்து) கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கான ஓய்வூதியம் ஆகஸ்டு-2023 முதல் ரூ.1,200/- ஆகவும், உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான 2024-25ஆம் நிதியாண்டிற்கு ரூ.5421.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

  • மாநில அரசு திட்டங்கள் சமூகத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தினை காத்ததிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பின்வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    1. மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்,
    2. ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம்,
    3. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்-(OAP),
    4. ஆதரவற்ற / கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம்,
    5. 50 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம்
    6. இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதிய திட்டம் (OAP, DAP, DWP, DDWP).

  • தகுதிகள் தமிழ்நாடு அரசின் முழு நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் பின்வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற கீழ்க்காணும் தகுதிகளை அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
  • வ.எண்

    திட்டத்தின் பெயர்

    தகுதி / நிபந்தனைகள்

    1

    மாற்றத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்.
  • வேலையற்றவராக இருத்தல் வேண்டும்.
  • தனியார் மற்றும் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இருப்போரின் ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • வயது – 18 மற்றும் அதற்கு மேல் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
  • மாற்றுத் திறன் நிலை – 40 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.
  • 2

    ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம்.
  • ஆதரவற்ற விதவையாக இருத்தல் வேண்டும்.
  • வயது – 18 மற்றும் அதற்கு மேல் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
  • அசையா சொத்து ரூ.1,00,000/-திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • 3

    முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்.
  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  • வயது – 60 மற்றும் அதற்கு மேல் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
  • நிலமற்ற விவசாயத் தொழிலாளியாக இருத்தல் வேண்டும்.
  • அசையா சொத்து ரூ.1,00,000/-திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • 4

    ஆதரவற்ற / கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்.
  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  • வயது – 30 மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.
  • சட்ட பூர்வமாக விவாகரத்தோ அல்லது குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் கணவனால் கைவிடப்பட்டவராகவோ, அல்லது நீதிமன்றத்தின் மூலம் சட்டப்பூர்வ பிரிவு சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
  • அசையா சொத்து ரூ.1,00,000/-திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • 5

    50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப்பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்.
  • ஆதரவற்ற மற்றும் திருமணமாகாத பெண்ணாக இருத்தல் வேண்டும்.
  • வயது – 50 மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.
  • அசையா சொத்து ரூ.1,00,000/-திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • 6

    இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் (OAP, DAP, DWP, DDWP).
  • OAP, DAP, DWP மற்றும் DDWP ஆகிய திட்டங்களுக்கு வரையறுக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன.

  • ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் : தேசிய சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பின்வருமாறு:-
    1. இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்,
    2. இந்திராகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம்,
    3. இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்,
    4. தேசிய குடும்பநலத் திட்டம்.

  • தகுதிகள் மேற்காணும் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற, பின்வரும் தகுததிகளை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ளது:-
  • வ.எண்

    திட்டம்

    தகுதிகள்

    1

    இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்.
  • ஆதரவற்றவராகவும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், வயது – 60 மற்றும் அதற்கு மேல் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
  • 2

    இந்திராகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம்.
  • ஆதரவற்ற விதவையாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், வயது – 40 மற்றும் அதற்கு மேல் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
  • 3

    இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்.
  • மாற்றுத் திறன் நிலை – 80 சதவிகிதம் அல்லது அதற்கு மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், வயது – 18 மற்றும் அதற்கு மேல் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
  • 4

    தேசிய குடும்பநலத் திட்டம்.
  • வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் பொருளீட்டும் நபரின் வயது – 18 முதல் 59 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும்.
  • மேற்காணும் திட்டங்களின் கீழான பயனாளிகளின் அசையா சொத்து மதிப்பு கணக்கிடும் நேர்வுகளில், மேற்படி பயனாளிகளுக்கு, எந்தவொரு திட்டத்தின் கீழும் இலவச வீடு ஒதுக்கப்பட்டிருப்பின், அவ்வகை ஒதுக்கீடு அசையா சொத்து மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

  • நிதி பங்களிப்பு – ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்கு

  • வ.எண்.

    திட்டத்தின் பெயர்

    மத்திய அரசின் பங்களிப்பு

    மாநில அரசின் பங்களிப்பு

    மொத்தம்

    1

    இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்

    60 வயது முதல் 79 வயது வரை

    200/-

    1000/-

    1200/-

    80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவயது

    500/-

    700/-

    1200/-

    2

    இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்

    300/-

    1200/-

    1500/-

    3

    இந்திராகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம்

    300/-

    900/-

    1200/-

    4

    மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்

    -

    1500/-

    1500/-

    5

    ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம்

    -

    1200/-

    1200/-

    6

    முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

    -

    1200/-

    1200/-

    7

    ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்

    -

    1200/-

    1200/-

    8

    50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

    -

    1200/-

    1200/-

    9

    இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் (OAP, DWP, DDWP)

    -

    1200/-

    1200/-

    10

    இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் (DDPS)

    -

    1500/-

    1500/-


  • சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்தல்
  • சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக, https://www.tnesevai.tn.gov.in என்ற இணைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் வருவாய்த் துறை அதிகாரிகளால் உரிய முறையில் சரிபார்க்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மூலம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்படுகிறது.
    சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ்ப் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது உரிய சிரணை மேற்கொள்ளப்பட்டு, 30 தினங்களுக்குள் தீர்வு செய்யப்படுகின்றன.
  • நேரடி பயன் (DBT) அடிப்படையில் ஓய்வூதியங்கள் வரவு வைக்கப்படுதல்
  • அரசாணை (நிலை) எண் 333, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 31.08.2024-இன்படி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், ஓய்வூதியம் வழங்குவது ஒருங்கிணைக்கப்பட்டு, பட்டிகள் தயாரிப்பது மையப்படுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் 2024 முதல், Global Beneficiary Master (GBM) Module மூலம் உரிய சரிபார்ப்புகளுக்குப் பிறகு கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தால் பட்டிகள் (Bills) தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் வங்கிகள் மற்றும் மின்னணு பணவிடை (eMO) மூலம் வருவாய் நிருவாக ஆணையரகத்தால் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
  • ஓய்வூதியதாரர்களுக்கான இதர பயன்கள்
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் மூலம் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு இரு முறை பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது, ஆண் பயனாளிகளுக்கு ஒரு வேட்டியும், பெண் பயனாளிகளுக்கு ஒரு சேலையும் வழங்கப்பட்டு வருகிறது, பயனாளிகள் பின்வரும் விதிமுறைகளின்படி தரமான அரிசியை விலையில்லாமல் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்:-
    i. அங்கன்வாடி மையங்களில் உணவு உட்கொள்ளாதவர்களுக்கு மாதம் 4 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
    ii. அங்கன்வாடி மையங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு மாதம் 2 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
    iii. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013-இன்படி, சமூக பாதுகாப்புத் திட்ட பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

Untitled Document