தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் முன்னாள் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் ஏனைய பயன்கள்

  • இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து, சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு முனைப்புடன் நடைமுறைப்டுத்தி வருகிறது. அதன்படி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ வசதிகள், இலவச போக்குவரத்து வசதிகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பு மற்றும் வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளித்தல் போன்ற பல்வேறு வசதிகள், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அரசால் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
  • விடுதலைப் போராட்ட வீரர்களின் தேசப்பற்று உணர்வை அங்கீகரிக்கும் பொருட்டும், அவர்களின் மேலான தியாகத்தைப் போற்றும் வகையிலும், ஓய்வூதியத் திட்டம் 01.10.1966 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • தகுதிகள்
  • இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக மூன்று மாத காலத்திற்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாவர். 01.04.1980 முதல், மேற்படி ஓய்வூதியம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதியானது, மூன்று மாத கால சிறைத் தண்டனை என்பதிலிருந்து மூன்று வார கால சிறைத் தண்டனை எனக் குறைக்கப்பட்டுள்ளது.
  • விடுதலைப் போராட்டத்தின் போது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களும், துப்பாக்கி சூட்டிலோ அல்லது காவலர் தடியடியிலோ இறந்தவர்கள் அல்லது நிரந்தரமாக ஊனமுற்றவர்கள் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாவர்.
  • 07.06.1982 முதல் கீழ்க்கண்ட பிரிவினர்களும் தகுதியானவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்:-

    (அ) இந்திய தேசிய இராணுவத்தில் (Ex.INA) பணியாற்றிய முன்னாள் வீரர்கள்.
    (ஆ) 1946-ஆம் ஆண்டில் நடைபெற்ற கடற்படை கலகத்தில் பங்கு கொண்டவர்கள்.
    (இ) மதுரை சதித்திட்ட வழக்கில் சிறைத் தண்டனை அடைந்தவர்கள்.
    (ஈ) விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக அரசு பணியிலிருந்து பணியறவு / பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள்.
    (உ) விடுதலைப் போராட்டத்தின் போது தலைமறைவாக இருந்தவர்கள் மற்றும் சொத்து பறிமுதல் / பற்றுகை செய்யப்பட்டவர்கள்.

  • மேற்கண்ட இனங்களில் (ஈ) மற்றும் (உ) ஆகியவற்றிற்கு ஆதாரமாக நீதிமன்ற ஆவணம் அல்லது அரசு ஆவண ஆதாரங்களை சமர்ப்பித்தால், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாவர்.

  • 11.03.1983 முதல் மேற்படி ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு நீக்கப்பட்டது.

    குடும்ப ஓய்வூதியம்
  • மாநில அரசின் ஓய்வூதியம் பெற்று வருகின்ற விடுதலைப் பேராட்ட வீரர் இறக்க நேரிட்டால், அன்னாரின் மனைவிக்கு / கணவருக்கு / உரிய வயதடையாத குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடந்து வழங்கப்படுகிறது.
  • மேலும், விடுதலைப் போராட்ட வீரரின் வாரிசாகிய மகனோ/மகளோ, மகன் என்றால் 18 வயதிற்கு பிறகும், மகள் என்றால் 21 வயதிற்கு பிறகும் சுயமாய் சம்பாதித்து வாழ முடியாத அளவிற்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ பாதிக்கப்பட்ட மாற்றுத் திளனாளியாக இருக்கும்பட்சத்தில், அவர்களது வாழ்நாள் வரை குடும்ப ஓய்வூதியம் தொடர அரசு ஆணையிட்டுள்ளது.

    ஓய்வூதியத் தொகை
  • சுதந்திரப் போராட்ட வீரர்களின் சூழ்நிலைகளை அரசு கருணையுடன் பரிசீலித்து வருவதால், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியத் தொகை மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது.
  • மேற்கண்ட ஓய்வூதியம் 01.10.1966 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 01.10.1966-இல் ரூ.50/-ஆக வழங்கப்பட்ட ஓய்வூதியம் பல்வேறு காலகட்டங்களில் உயர்த்தி அளிக்கப்பட்டு, இவ்வரசு பொறுப்பேற்ற பின், 15.08.2021 முதல் ஓய்வூதியம் ரூ.18,000 ஆகவும், 15.08.2022 முதல் ரூ.20,000 ஆகவும், தற்போது 15.08.2024 முதல் மாதம் ஒன்றிற்கு ரூ.20,000/- த்திலிருந்து ரூ.21,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
  • அதேபோன்று, 01.10.1966-இல் ரூ.50/- ஆக வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் இவ்வரசு பொறுப்பேற்ற பின், 15.08.2021 முதல் ரூ.9,000 ஆகவும், 15.08.2022 முதல் ரூ.10,000 ஆகவும், 15.08.2023 முதல் ரூ.11,000 ஆகவும், கடந்த 15.08.2024 முதல் ரூ.11,000/-த்திலிருந்து ரூ.11,500/- ஆக உயர்த்தி வழங்கி வருகிறது. அவ்வாறு 01.10.1966 முதல் 15.08.2024 வரை பல்வேறு காலகட்டங்களில் உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் விவரங்கள் பின்வருமாறு:-

    வ.எண்.

    கால அளவு

    ஓய்வூதியத் தொகை
    (ரூபாயில்)

    குடும்ப ஓய்வூதியத் தொகை
    (ரூபாயில்)

    1. 01.10.1966 முதல் 50/- 50/-
    2. 15.08.1972 முதல் 75/- 75/-
    3. 01.04.1979 முதல் 100/- 100/-
    4. 25.01.1981 முதல் 150/- 150/-
    5. 10.06.1986 முதல் 250/- 250/-
    6. 01.08.1989 முதல் 350/- 350/-
    7. 01.01.1991 முதல் 400/- 400/-
    8. 01.08.1992 முதல் 1,000/- 500/-
    9. 01.09.1995 முதல் 1,500/- 750/-
    10. 15.08.1997 முதல் 3,000/- 1,500/-
    11. 01.05.2007 முதல் 4,000/- 2,000/-
    12. 01.09.2009 முதல் 5,000/- 2,500/-
    13. 15.08.2012 முதல் 7,000/- 3,500/-
    14. 01.08.2013 முதல் 9,000/- 4,500/-
    15. 15.08.2014 முதல் 10,000/- 5,000/-
    16. 15.08.2015 முதல் 11,000/- 5,500/-
    17. 15.08.2016 முதல் 12,000/- 6,000/-
    18. 15.08.2017 முதல் 13,000/- 6,500/-
    19. 15.08.2018 முதல் 15,000/- 7,500/-
    20. 15.08.2019 முதல் 16,000/- 8,000/-
    21. 15.08.2020 முதல் 17,000/- 8,500/-
    22. 15.08.2021 முதல் 18,000/- 9,000/-
    23. 15.08.2022 முதல் 20,000/- 10,000/-
    24. 15.08.2023 முதல் 20,000/- 11,000/-
    25. 15.08.2024 முதல் 21,000/- 11,500/-


    சிறப்பு ஓய்வூதியம்
  • விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கு கொண்டு குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றி நாட்டிற்காக பெருமை சேர்த்தவர்களின் தியாகத்தைப் அங்கீகரிக்கும் வகையில், அவர்களது வாரிசுகளுக்கு சிறப்பு ஓய்வூதியம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
  • கடந்த 15.08.2024 முதல், மேற்படி சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,000/- த்திலிருந்து ரூ.10,500/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
    தற்போது,

    i. சிவகங்கையைச் சேர்ந்த மருதுபாண்டியர் சகோதரர்களின் 92 வழித்தோன்றல்கள் மேற்படி ஓய்வூதியத்தைனைப் பெற்று வருகின்றனர்.
    ii. வீரபாண்டிய கட்டபொம்மனின் வரித்தோன்றல் ஒருவர் மேற்படி ஓய்வூதியத்தினைப் பெற்று வருகிறார்.
    iii. முன்னாள் இராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் 49 தகுதியான வழித்தோன்றல்கள் மேற்படி ஓய்வூதியத்தைனைப் பெற்று வருகின்றனர்.
    iv. சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வழித்தோன்றல் ஒருவர் மேற்படி ஓய்வூதியத்தைனைப் பெற்று வருகிறார்.

  • மேற்கண்ட சிறப்பு ஓய்வூதியம் அவர்கள் வாழ்நாள் முழுவதற்கும் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு திட்டங்களின் கீழ் மாநில ஓய்வூதியம் பெறும் சுதந்திர போராட்ட வீரர்கள்

    ஏனைய சலுகைகள்
  • விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றம் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் ஏனைய சலுகைகள் பற்றிய விவரம் பின்வருமாறு:-
    அ) மருத்துவ வசதி
  • ஒன்றிய அரசு ஓய்வூதியமோ, மாநில அரசு ஓய்வூதியமோ அல்லது இரண்டு ஓய்வூதியங்களம் பெற்று வருகின்ற அனைத்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறும் விதவைகளுக்கும் / இளவர் வாரிசுகளுக்கும் மருத்துவப்படி 19.10.2012 முதல் ரூ.500/- வழங்கப்பட்டு வருகிறது.
  • ஓய்வூதியதாரர்கள் அல்லது அவரது வாரிசுதாரர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பழைய அரசு மருத்துவமனைகளுக்கு வரும்போது ‘அ’ வகுப்பு வசதிகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சையும், ‘அ’ வகுப்பு வசதியற்ற புதிய மருத்துவமனைகளில் கட்டணப் பிரிவுகளின் கீழ் எந்தவித கட்டணமும் இல்லாமல் உயர்தர சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
    ஆ) போக்குவரத்து வசதி
  • ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களின் விதவைகள் மற்றும் ஓய்வூதியம் பெற்று வரும் வாரிசுதாரர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் போது, அவர்களடன் உதவியாளர் ஒருவருக்கும் கட்டணமில்லாமல் பயணம் செய்ய இலவச பயண அட்டை அரசால் வழங்கப்பட்டுள்ளது.
    இ) வீட்டு வசதி
  • தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்படும் வீடு/மணை/அடுக்கு மாடி குடியிருப்பு ஆகியவற்றில், 19% ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கும், 4% சலவைத் தொழிலாளர் & நாவிதர்களுங்ககும் மற்றும் 38% இதர பொதுமக்களுக்கும் வழங்குவதிலிருந்து 1% விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
    ஈ) வேலை வாய்ப்பில் முன்னுரிமை
  • வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து அரசுத் துறைகளுக்கும் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் பெயர் பட்டியல் அனுப்பப்படும் போது விடுதலைப் போராட்ட வீரர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
    உ) ஈமச்சடங்குச் செலவு
  • விடுதலைப் போராட்ட வீரர் இறக்கும் நேர்வில், ஈமச்சடங்கு செலவுக்காக விடுதலைப் போராட்ட வீரரின் மனைவி அல்லது அவருடைய நேரடி வாரிசுதாரர்களுக்கு ஈமச் செலவுத் தொகையாக ரூ.5,000/- உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. இறந்துபோன விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வட்டாட்சியர் பதவிக்கு குறையாத நிலையிலுள்ள வருவாய்ததுறை அலுவலர் ஒருவரால் அரசு சார்பில் இறந்த விடுதலைப் போராட்ட வீரருக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படுகிறது. மாநில அரசி ன ஓய்வூதியம் அல்லது ஒன்றிய அரசின் ஓய்வூதியம் அல்லது இவ்விரண்டு ஓய்வூதியங்களையும் பெறுகின்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

    ஒன்றிய அரசின் ஓய்வூதியத் திட்டம்
  • 15.08.1972 முதல் ஒன்றிய அரசும் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஓய்வூதியத் திட்டத்தை (Swatantrata Sainik Samman Pension) செயல்படுத்தி வருகிறது. தற்போது, ஒன்றிய அரசு இத்திட்டத்தைனை 01.04.2017 முதல் ’‘Swatantrata Sainik Samman Yojana“ என பெயர் மாற்றம் செய்துள்ளது. இத்திட்டத்தின்படி வழங்கப்படும் சலுகைகள் பின்வருமாறு:-

    i. இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு 01.07.2024 முதல் ரூ.39,260/- (அடிப்படை ஓய்வூதியம் ரூ.26,000/- மற்றம் அகவிலைப்படி 51%) ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
    ii. ஒன்றிய அரசின் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு / ஒன்றிய அரசின் குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து ஓய்வூதியமாக, மாதமொன்றிற்கு ரூ.500/-ம், மருத்துவப்படியாக ரூ.500/-ம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒன்றிய அரசு ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்கள் / ஒன்றிய அரசின் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 382 ஆகும்.

Untitled Document