தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

முன்னுரை


  • வருவாய்த்துறை மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குகிறது. அனைத்து நிருவாகத் துறைகளுக்கும் தாய்த்துறையாக வருவாய்த்துறை கருதப்படுகிறது.
  • இத்துறை குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் இரண்டற கலந்து பயனளிக்கிறது. சீரான சமூக வளர்ச்சிக்கு இத்துறையின் பங்கு அளவிடற்கரியது. சாமானிய மனிதனின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் வருவாய்த் துறையின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
  • மாநிலத்தில் உள்ள நிருவாக அமைப்புகளில் வருவாய்த்துறை மிகவும் பழமையானதும் பெருமைக்குரியதும் ஆகும். வருவாய்த்துறை குக்கிராமத்திலும், கிராமத்திலும், மாநிலத்திலும் முழுமையான கட்டமைப்பினை கொண்டுள்ளதால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடிகிறது. இத்துறை மாநிலம் முழுமைக்கும் நகரம் முதல் கிராமம் வரை நன்கு வரையறுக்கப்பட்ட நிர்வாக அமைப்பினை கொண்டுள்ளது. ஆதலால் அரசின் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்களும் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • பெரும்பான்மையான துறைகள் வருவாய்த்துறையிலிருந்தே உருவாக்கப்பட்டதால் அவற்றின் செயல்பாடுகள் இத்துறையினை சார்ந்துள்ளது மட்டுமின்றி மாவட்டத்தில் நிலம் மற்றும் இதர திட்டங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் மூலமும் செயல்படுத்துவதினால் வருவாய்த்துறை முக்கியமான துறையாக விளங்குகிறது.
  • இத்துறை சட்டம் ஒழுங்கு பராமதிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது வருவாய்த்துறையின் நிர்வாக நடுவர்கள் மூலம் குவிச நடைமுறைகளைப் பின்பற்றி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு சுமூகமாக தீர்வு காணப்படுகிறது.
  • இத்துறை அரசின் உடமைகளான நிலம், நீர்நிலை, கனிமம் மற்றும் புதையல் ஆகியவற்றிற்கு பாதுகாவலனாக இருந்து வருகிறது.
  • விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள், முதியோர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அரசின் உதவித் தொகையை பெறுவதற்கும், தொழில் முனைவோர் மற்றும் பொது/தனியார் தொழிற்சாலைகள் பயன்பெறும் வகையில் பல்வேறு விதமான சான்றிதழ்களை, குறிப்பாக சாதி, பிறப்பு, இறப்பு, வாரிசு சான்று, வருமான சான்று, பட்டா மாறுதல் சான்று மற்றும் பல்வேறு உரிமங்கள் ஆகியவற்றை இத்துறை வழங்கி வருகிறது.
  • அதோடு மட்டுமல்லாமல் இந்திய மற்றும் மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களிலும், மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ள அமைப்பிகளுக்கான தேர்தல்களிலும் வருவாய்த்துறை மிக முக்கியப் பங்காற்றுகிறது.
  • மேலும், வருவாய்த்துறை இயற்கை இடர்ப்பாடுகளின் போதும், மனிதர்களால் ஏற்படும் பேரிடர்களின் போதும் அனைவரின் எதிர்பார்ப்பிற்கேற்ப முன்னின்று செயல்பட்டு வருகிறது. வறட்சி, வெள்ளம், புயல், சுனாமி, தீ விபத்துகள் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை எளிதில் சென்றடைவதிலும் மற்றும் நெருங்க முடியாத இடங்களில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மற்றும் உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் முதன்மையான துறையாக செயல்பட்டு வருகிறது.
  • பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் , இதர அத்தியாவசிய பொருட்கள் வழங்கியும் மற்றும் சேதமடைந்த மக்களது குடியிருப்புகளை மறு கட்டுமானம் செய்வதற்கு நிதி உதவி ஆகியவற்றையும் இத்துறையின் மூலம் வழங்கப்படுகிறது.
  • பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்களை மீட்டும், நிவாரணப்பணி மற்றும் மறுசீரமைப்பு பணிகளை அறிவியல் பூர்வமாகவும் மனிதநேயத்துடனும் அணுகுவதால் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
  • 1980-ஆம் ஆண்டு வருவாய் வாரியம் கலைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் புதிதாக உருவாக்கப்பட்ட 3 ஆணையரகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பின்னர் பன்முக செயல்பாடுகளின் அடிப்படையில் தற்போது 5 ஆணையரகங்களைக் கொண்டு இத்துறை செயல்பட்டு வருகின்றது.
  • வருவாய்த்துறை தற்பொழுது மிகவும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்சார்ந்த இவ்வரசாங்கத்தில் சீராக்கம் மட்டும் நோக்கமின்றி, செயலாக்கம் கொண்டதாகவும் தனது சேவையில் இத்துறை மேம்பட்டுள்ளது. திறமை, பொறுப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை கொள்கையாகக்கொண்டு இத்துறை செயல்பட்டுவருகிறது.
  • தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பொதுமக்களுக்கு அன்றாடம் அத்தியாவசியமாக தேவைப்படும் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் எளிய மக்களுக்குத் தேiவாயன சமூக பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது

Untitled Document