வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்
வருவாய் கிராம நிருவாகம்
வருவாய் நிருவாகத்தின் அச்சாணியாகவும், முக்கிய அங்கமாகவும் வருவாய் கிராம நிருவாகம் உள்ளது. வருவாய் கிராமத்தினை நிருவகிக்கும் அலுவலர் கிராம நிருவாக அலுவலர் ஆவார்.
கிராம நிருவாக அலுவலர் கிராம கணக்குகளை பராமரித்தல், நிலவரி வசூல் செய்தல், அரசு நிலங்களை பாதுகாத்தல் போன்ற பணிகளை செயல்படுத்தும் அலுவலர் ஆவார்.
பொதுமக்களுக்கு பேரிடர் காலங்களில் தகவல் அளித்தல் மற்றும் உயர் அலுவலர்களுக்கு அசம்பாவித நிகழ்வுகள் / சட்டம் ஒழுங்கு குறித்து தகவல் அளித்தல் ஆகிய பணிகளில் கிராம நிருவாக அலுவலர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.