வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்
குறுவட்ட நிருவாகம்
ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள சில வருவாய் கிராமங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பிர்க்கா என்று அழைக்கப்படும் குறுவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வருவாய் ஆய்வாளர் குறுவட்டத்தில் உள்ள நிருவாக பணிகளை மேற்கொள்வார். இவர் நிலவரிவசூல் பணியிலும், கிராம நிருவாக அலுவலர்களின் பணியினை மேற்பார்வையிடுவதிலும் முக்கிய பங்கு வருகிறார்.