வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்
இத்துறையின் பணிகளில் அடங்குபவை:-
ஆட்சி எல்லைகளை மறுசீரமைத்தல் / புதிய நிருவாக அலகுகளை உருவாக்குதல்.
அரசின் சேவையினை எளிதாகவும் விரைவாகவும் மக்களின் இருப்பிடத்தில் இருந்தே பெறும் பொருட்டு பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், தொலைதூர பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை விரைந்து அளிக்கும் பொருட்டு, புதிய மாவட்டங்கள், புதிய வருவாய் கோட்டங்கள் மற்றும் புதிய வருவாய் வட்டங்கள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகையின் அடிப்படையில் புதிய வருவாய் வட்டங்களை பிரிப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைங்க வருவாய் நிருவாக ஆணையர், நில நிருவாக ஆணையர், நிலச் சிர்திருத்த ஆணையர் ஆகிய 3 அலுவலர்களை கொண்ட குழு அரசால் அமைத்து ஆணையிடப்பட்டது.
மாவட்ட வாரியாக உள்ள வருவாய் கோட்டங்கள், வருவாய் வட்டங்கள், குறு வட்டங்கள் மற்றும் கிராமங்களின் எண்ணிக்கை விவரங்கள்
வ.எண் | மாவட்டம் |
வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கை |
வருவாய் வட்டங்களின் எண்ணிக்கை |
குறுவட்டங்களின் எண்ணிக்கை |
கிராமங்களின் எண்ணிக்கை |
1 |
அரியலூர் |
2 | 4 | 15 | 195 |
2 |
செங்கல்பட்டு |
3 | 8 | 40 | 676 |
3 |
சென்னை |
3 | 16 | 51 | 138 |
4 |
கோயம்புத்தூர் |
3 | 11 | 38 | 298 |
5 |
கடலூர் |
3 | 10 | 32 | 905 |
6 |
தருமபுரி |
2 | 7 | 23 | 479 |
7 |
திண்டுக்கல் |
3 | 10 | 40 | 361 |
8 |
ஈரோடு |
2 | 10 | 35 | 465 |
9 |
கள்ளக்குறிச்சி |
2 | 6 | 24 | 562 |
10 |
காஞ்சிபுரம் |
2 | 5 | 25 | 525 |
11 |
கன்னியாகுமரி |
2 | 6 | 22 | 188 |
12 |
கரூர் |
2 | 7 | 20 | 203 |
13 |
கிருஷ்ணகிரி |
2 | 8 | 31 | 661 |
14 |
மதுரை |
4 | 11 | 51 | 665 |
15 |
மயிலாடுதுறை |
2 | 4 | 15 | 287 |
16 |
நாகப்பட்டினம் |
2 | 4 | 16 | 236 |
17 |
நாமக்கல் |
2 | 8 | 32 | 454 |
18 |
நீலகிரி |
3 | 6 | 15 | 106 |
19 |
பெரம்பலூர் |
1 | 4 | 11 | 152 |
20 |
புதுக்கோட்டை |
3 | 12 | 45 | 763 |
21 |
இராமநாதபுரம் |
2 | 9 | 38 | 400 |
22 |
ராணிப்பேட்டை |
2 | 6 | 18 | 331 |
23 |
சேலம் |
4 | 14 | 44 | 640 |
24 |
சிவகங்கை |
2 | 9 | 39 | 521 |
25 |
தென்காசி |
2 | 8 | 30 | 246 |
26 |
தஞ்சாவூர் |
3 | 9 | 50 | 911 |
27 |
தேனி |
2 | 5 | 17 | 114 |
28 |
தூத்துக்குடி |
3 | 10 | 41 | 480 |
29 |
திருச்சிராப்பள்ளி |
4 | 11 | 43 | 507 |
30 |
திருநெல்வேலி |
2 | 8 | 30 | 370 |
31 |
திருப்பத்தூர் |
2 | 4 | 15 | 197 |
32 |
திருப்பூர் |
3 | 9 | 33 | 351 |
33 |
திருவள்ளூர் |
3 | 9 | 49 | 787 |
34 |
திருவண்ணாமலை |
3 | 12 | 54 | 1067 |
35 |
திருவாரூர் |
2 | 8 | 28 | 573 |
36 |
வேலூர் |
2 | 6 | 20 | 317 |
37 |
விழுப்புரம் |
2 | 9 | 34 | 928 |
38 |
விருதுநகர் |
3 | 10 | 39 | 603 |
மொத்தம் |
94 | 313 | 1195 | 17662 |
வருவாய்த்துறை கட்டடங்கள்
பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலும் அலுவலக சூழலை மேம்படுத்தும் பொருட்டும், மாவட்ட ஆட்சியர் நிலை முதல் கிராம நிருவாக அலுவலர் நிலை வரை உள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் விதமாக அலுவலக மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் கட்ட அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.