வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு (National Population Register)
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ல் துவங்கப்பட்டு, 1881 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ல் நடைபெற்றது.
2021-ல் நடைபெற இருப்பது இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பும் சுதந்திர இந்தியாவின் 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். 2021 -ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து இப்பணி துவங்குவதற்கான ஆயத்த பணிகளை முடித்துள்ளது.
தமிழ்நாட்டில் இக்கணக்கெடுப்புப் பணி தொடர்பாக தக்க ஆலோசனைகள் வழங்குவதற்கு வருவாய் நிருவாக ஆணையரை தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரை வழங்கும் குழுவில் (Technical Advisory Committee) உறுப்பினராக சேர்த்து அரசாணை எண் 62, பொது (சட்ட அலுவலர்கள்) துறை, நாள் 18.1.2019-ல் ஆணைகள் வெளியிட்டுள்ளது.